அமெரிக்காவிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை, கனடாவை நோக்கி ஈர்ப்பதற்கு தற்போது ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது என, கனடா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜோஸ் ரீமர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுகாதாரத் துறை வேலை இழப்புகள் காரணமாக, அங்கிருந்து வெளியேறும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்க மருத்துவர்கள் கனடாவிற்கு குடிபெயர்வதை எளிதாக்க, கனடா அரசு விரைவாக விசாக்களை வழங்க வேண்டும் என்றும், குடிவரவு நடைமுறைகளில் உள்ள தேவையற்ற நடவடிக்கைகளை அகற்ற வேண்டும் என்றும் அவரது அமைப்பு வலியுறுத்துகிறது.
