அமெரிக்கா மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தரையிறங்கும் போது தலைகீழாக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்களும் இருந்தனர். இதில் 10 பேர் மட்டும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 17 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விமானம் விபத்துக்குள்ளானபோது கரும்புகை வானை நோக்கி எழுந்தது. உள்வரும் விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
பல மாற்று விமானங்களைப் பெறுவதற்குத் தயாராகி வருவதாக மாண்ட்ரீல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானம் விபத்துக்குள்ளானமைக்காக காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கிரேட்டர் டொராண்டோ விமான நிலைய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.