சர்வதேச மாணவர்கள் மீது கரிசனை காட்டு கனடா அரசு தற்போது Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் Joint Programmes-இல் இணையும் மாணவர்கள் Attestation Letter பெறும் போது தனித்தனியாக பெற வேண்டிய அவசியமில்லை என்றும் ஒரே Provincial Attestation Letter போதுமானதாக இருக்கும் என Immigration, Refugees and Citizenship Canada (IRCC) அறிவித்துள்ளது.
இந்த முறைமையால் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இது இலகுவான ஒன்றாக காணப்படுகின்றது.
மேலும், Master’s மற்றும் Doctoral படிப்புகளில் சேரும் மாணவர்கள், அவர்கள் பொது நிறுவனங்களில் (Public Institutions) படிப்பவர்களாக இருந்தால், Attestation Letter-இல் இருந்து விலக்கு பெறுவார்கள்.
ஆனால், Visiting Students மற்றும் Graduate Visitors இன்னும் Attestation Letter சமர்ப்பிக்க வேண்டும்.
கியூபெக் மாநிலத்தில் Vocational Programmes-க்கு சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், CEGEP Institutions-இல் படிக்கும் மாணவர்கள் Attestation Letter சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது.
அதே நேரத்தில், கனடா அரசு Study Permit Caps-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2026-இல் சர்வதேச மாணவர் சேர்க்கை இலக்கு 155,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2025-இல் இருந்த 305,900 இலக்கிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டு வசதி மற்றும் சமூக சேவைகளின் அழுத்தத்தை குறைப்பதே அரசின் நோக்கமாகும்.
இந்த புதிய விதிகள், சில மாணவர்களுக்கு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் நிலையில் இருந்தாலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது.
