Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கனரக வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

மார்ச் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து சென்ற கனரக வாகனத்தை நிறுத்தாது தப்பி ஓடிய வாகனத்தை துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடாத்தி மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை(05) இருவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி சம்பவ தினமான இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் ஒன்றை, கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிசார் பணித்தனர்.

இதன் போது அதனை மீறி கனரக வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து, அவர்களை பின் தொடர்ந்து பொலிசார் துரத்தி சென்ற நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியதையடுத்து அதனை துரத்தி சென்ற நிலையில் குறித்த வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தது.

இதனையடுத்து பொலிசார் குறித்த வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியபடுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனை தடையை அமைத்து அதனை நிறுத்துமாறு பணித்துள்ளனர்.

இதன் போது அந்த தடையை மீறி கனரக வாகனம் மட்டுநகர் நோக்கி தப்பி ஓடிய நிலையில், அந்த வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி கை துப்பாக்கியால் இரண்டு துப்பாகி பிரயோகம் மேற்கொண்டார்.

இதையும் மீறி குறித்த வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டு தலைமையக பொலிசார் நகரின் திருகோணமலை வீதி வை’ சந்தி பகுதியில் வீதி சோதனை அமைத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளையும், 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹேரோயின் போதை பொருளை மீட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தலைமறைவாகி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சுன்னாகம் பகுதியில் தடம் புரண்ட டிப்பர் வாகனம் – சாரதி கைது
அடுத்த செய்தி மட்டக்களப்பில் 18 பேருக்கு டெங்கு நோய் அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 ஏப்ரல் 2025

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நடமாடும் சேவை வேலைத்திட்டம்

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி!

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?