யாழ்ப்பாணம் தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் நூலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்து நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்தார்.
இதன் பின்னர் ‘நெய்தலின் ஊற்று’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தை கட்டுவதற்கு அன்பளிப்புச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.