Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 18 பேருக்கு டெங்கு நோய் அடையாளம்

மார்ச் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சிக்கன் கூனியா நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் இளைதம்பி உதயகுமார் கேரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு நகர்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளான கொக்குவில் மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் உள்ள வீடுகளை சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (5) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் மற்றும் மாநகரசபை, கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது

இதற்கமைய கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் 3 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றதுடன், கொக்குவில் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்களும் கோட்டமுனை பகுதியில் 6 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனா.

எனவே கண்டுபிடிக்கப்பட்ட நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் பகுதிகளில் டெங்கு நுளம்பு குடம்பிகளை அகற்றும் பணியை முன்னெடுக்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்து வருகின்றோம்.

இதனால் நோய் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரக் கூடியதாக இருக்கின்றது, இருந்தாலும் பொது மக்கள் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் உள்ள வெற்றுக் காணிகள் மற்றும் தொடர்ந்து பூட்டியுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக டெங்கு நுளம்பு பரவும் இடங்களை துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அவ்வாறு ஒத்துழைப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என்பதுடன் சிக்கன் கூனியா நோயாளர்களும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளனர். அதுவும் நுளம்பால் பரவக் கூடியது என்றார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் கனரக வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்
அடுத்த செய்தி வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞன் விளக்கமறியலில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாங்குளத்தில் வாகன விபத்து

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுப்பு

ஜூன் 5, 2025
இலங்கை

சாரா ஜாஸ்மின் இறப்பதற்கு வாய்ப்பில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

ஜனவரி 7, 2026
இலங்கை

யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்ப்பு

டிசம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?