ஓட்டவா நகரின் பொதுப் போக்குவரத்துச் சேவையான ‘OC Transpo’-வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு, கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் (Refund) என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஓ-ட்ரெயின் (O-Train) தடத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் சேவையும் முடங்கியது.
ஏற்கனவே பனிப்பொழிவுக்கு மத்தியில் பேருந்து ரத்துகளால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு, இந்த ரயில் பாதிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டவா மாநகர சபை உறுப்பினர்களான ஷான் டிவைன் (Sean Devine) மற்றும் ஷான் மெனார்ட் (Shawn Menard) ஆகியோர் நேற்று இந்தப் புதிய கோரிக்கையை முன்வைத்தனர்.
“ஒரு சேவையைப் பெறப் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு, அந்தச் சேவை கிடைக்காதபோது பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மற்ற நகரங்களில் இத்தகைய உத்தரவாதம் வழங்கப்படுகிறது” என, ஓட்டவா மாநகர சபை உறுப்பினர் ஷான் டிவைன் தெரிவித்துள்ளார்.
