Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நிபா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணிகளின் வருகைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையங்கள் மற்றும் ஏனைய நுழைவுப் பகுதிகளில் குடிவரவுச் சோதனைகளின் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்கள் மற்றும் நுழைவுப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள், இரத்தம் தொடர்பான சுகாதார ஆலோசனைகள் மற்றும் தேவையான இடங்களில் தடுப்பூசி தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு நோயாளி கண்டறியப்படும் வரை காத்திருக்கக் கூடாது எனவும் சர்வதேச பயணம் மற்றும் சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு முன்கூட்டியே செயல்படுவது மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிபா வைரஸ் என்பது விலங்கு மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும்.
முக்கியமாக பழந்தின்னி வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் பரவுகிறது.

காய்ச்சல், உடல் வலி, தசை வலி மற்றும் வாந்தி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.தீவிரமான நிலையில், மூளை வீக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கும் வழிவகுக்கும்.

பாதிக்கப்பட்ட வெளவால்களின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது கழிவுகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படுதல், அவற்றினால் அசுத்தமடைந்த உணவு அல்லது நீரை உட்கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பன்றிகள் போன்ற விலங்குகளுடன் தொடர்பு வைத்திருத்தல் மூலம் பரவுகிறது.

மிகக் குறைந்த அளவில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இது பரவக்கூடும்.வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் மற்றும் அசுத்தமடைந்திருக்கக்கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர் சஞ்சீவ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை
அடுத்த செய்தி இலங்கையில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் விபத்து

ஜனவரி 11, 2026
அண்மைய செய்திகள்உலகம்

வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு.

செப்டம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை

ஆகஸ்ட் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

ஆகஸ்ட் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?