நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் பகுதியில் இன்றையதினம் விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.


