Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு பகுதியை தருகின்றோம் – விகாராதிபதி

ஜனவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளை தவிர ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளை சூழவுள்ள வேலிகளை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் ஒரு பகுதியை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிப்பார் அல்லது அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என காணி உரிமையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

அந்நிலையில் குறித்த செய்தி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
காணிகளை விடுவிக்க முடியும் – கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை.

தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் ஒரு துண்டேனும் மீள வழங்க முடியாது என வெளியான செய்தி தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் கேட்ட வேளை,

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்த கட்ட கலந்துரையாடல் மிக விரைவில் நடைபெறும். அதில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில். இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடகிழக்கில் இந்தியாவை தவிர எந்த நாட்டிற்கும் இடமில்லை – தர்மலிங்கம் சுரேஸ்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மன்னார் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்!

நவம்பர் 18, 2025
1
இலங்கை

தொழிற் பயிற்சிகளை பெறவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதிவரை நீடிப்பு!

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?