மொன்றியலில் நடைபெறும் சைக்கிள் போட்டிகளை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வீதி மூடல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
போட்டிப் பாதையைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், போட்டி நடைபெறும் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறும், சாத்தியமான இடங்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகளவான நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

