கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பாக, 41 வயதான பிலிப் பெனொய்ட் (Philippe Benoit) என்பவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மொன்றியல் நகருக்கு வடகிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோரிசி (Mauricie) பிராந்தியத்தில் இந்த ஷாவினிகன் நகரம் அமைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த முக்கியமான தகவல்கள் பிலிப் பெனொய்ட்டிடம் இருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுவதால், அவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் என்றும், உடனடியாக அவசரப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறும் கியூபெக் மாகாண பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம், வயது அல்லது பாலினம் குறித்த விவரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.
இந்த விவரங்களை வெளியிடுவது தற்போது நடைபெற்று வரும் விசாரணையைப் பாதிக்கலாம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஷாவினிகன் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்-ஓ-சேபிள்ஸ் (Lac-aux-Sables) பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அப்பகுதி முழுவதிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

