கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த வாகனச் சாரதிகள் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது, எரிபொருளைப் பெற்றுக் கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் கார்பன் வரியினை ஒண்டாரியோ அரசாங்கம் நீக்கிய பின்னர், அந்த மாகாணத்தில் வாகனத்துக்கான எரிபொருளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.
கியூபெக் மாகாணம் கார்பன் தொடர்பில் தனக்கான சொந்த வரி அறவிடுதல் செயன்முறையை தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றது.
இதன்காரணமாக, கியூபெக் மாகாணத்தில் விற்கப்படும் வாகன எரிபொருளின் விலை பிற மாகாணங்களைக் காட்டிலும் உயர்வாக உள்ளது.
இந்த நிலையில், கியூபெக் வாகனச் சாரதிகள் எரிபொருளை குறைந்த விலையில் பெறுவதற்கான ஒண்டாரியோ மாகாணப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.