கியூபெக் மாகாணத்தில் கஞ்சா (Cannabis) போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ‘இன்ஸ்டிட்யூட் டி லா ஸ்டாடிஸ்டிக் டு கியூபெக்’ (ISQ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
2018-ஆம் ஆண்டு கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு முன்னதாக இது 14 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா போதைப்பொருள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் இளைஞர்கள் அதிகளவில் அதற்கு அடிமையாவார்கள் என்ற அச்சம் முன்னர் நிலவியிருந்தது.
தற்போதைய தரவுகள் அதற்கு ஒத்திசைவான முடிவுகளைக் காட்டுகின்றன.
கியூபெக் மாகாணத்தில் வாழும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே பெரும்பாலானோர் இதனைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
