அஜர்பைஜான் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கசகஸ்தான் அருகில் உள்ள அக்டாவ் பகுதியில் தரையிறங்கிய போது, விமானம் வெடித்து சிதறியுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு சில மணி நேரமாக வானில் வட்டமடித்ததாக கூறப்படுகிறது.
விமானி நீண்ட நேரமாக விபத்தை தடுக்க முயன்றும் இறுதி வரை இயந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.