மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர நிர்வாகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் பாரிய பனிப்பொழிவு நகரை தாக்கி இருந்தது. இதனால் மொன்றியல் மற்றும் லவாளில் சுமார் 70 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சுமார் எட்டு நாட்கள் வரையில் தேவைப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக வீதி போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பனிப் பொழிவுகள் ஏற்பட்டால் இந்த நடவடிக்கை மேலும் காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிற அதேவேளை
வாகனங்கள் மீதும் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய வீதிகளைக் கொண்ட பெருநகரங்களில் வார இறுதியில் நகராட்ச்சி ஒரு “சிறப்பு நடவடிக்கையை” மேற்கொண்டதாகவும், நகராட்ச்சியின் எல்லைகளுக்கு உட்பட்ட 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பனி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
20 சென்டிமீட்டர் பனியை அகற்றுவதற்கு வழக்கமாக நான்கு நாட்கள் ஆகும் என்றும், ஒரு நாளைக்கு 25 சதவீதம் பனி அகற்றப்படும் என்றும் சபோரின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பனியின் அளவு காரணமாக, ஒரே பகுதியில் ஒரு முறைக்கு பதிலாக இரண்டு முதல் மூன்று முறை பனிப்பொழிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பனி பொழிவை அகற்றுவதற்கான தாமதத்திற்கு மற்றுமொரு காரணம், நகராட்சியின் நடவடிக்கையின் போது அகற்ற வேண்டிய கார்களின் எண்ணிக்கை அதிகம் என்று சபோரின் தெரிவித்துள்ளார் .
“ஒவ்வொரு முறையும் நாம் ஒரு காரை இழுக்கும்போது, சுமார் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை இழக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
நகரம் முழுவதும் பனி அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த “நோ பார்க்கிங்” அறிகுறிகளுக்குக் கீழ்ப்படியுமாறு சபோரின் மொன்றியல் மக்களை வலியுறுத்தினார்.