கியூபேக் போக்குவரத்து ஆணையம் தனது பேருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘Preteckt’ என்ற நிறுவனத்துடன் ஒரு மில்லியன் டொலர் மதிப்பிலான மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026-ஆம் ஆண்டிற்குள் அனைத்து பேருந்துகளிலும் சென்சார் கருவிகள் பொருத்தப்படும்.
இந்த சென்சார்கள் பேருந்துகளின் என்ஜின் நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் நிகழ்நேரத்தில் சேகரிக்கும்.
சேகரிக்கப்பட்ட தரவுகளை செயற்கை நுண்ணறிவு மென்பொருளானது பகுப்பாய்வு செய்து, என்ஜின் பழுதடையும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
இந்தத் திட்டம், பேருந்து சேவையின் நம்பகத்தன்மையையும் நேரத் தவறாமையையும் அதிகரிக்கும் என்றும், இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குநர், பேட்ரிக் லெக்லெர்க் தெரிவித்துள்ளார்.
