நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 508,270 மக்கள் வசிக்கின்றனர்.
நியூபியன்ட்லண்ட் லாப்ரடோமுதல்வர் அன்று பியூரே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம் முதல்வராக இருந்த நிலையில் அரசியலில் இருந்து விலகும் முடிவை அன்றே பியூரே எடுத்துள்ளார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான அன்று பியூரே , தான் “ஒரு தொழில்முறை அரசியல்வாதி” அல்ல என எப்போதும் கூறி வருவதை நினைவுபடுத்தினார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
தனக்கு பதிலாக ஒரு புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியை ஆரம்பிக்குமாறு கட்சியை கேட்டுக் கொண்டுள்ளதாக அன்று பியூரே தெரிவித்தார்.புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் தொடர்ந்து முதல்வராக இருப்பேன் என அவர் கூறினார்.
லிபெரல் தலைமையை வென்ற பின்னர் ஆகஸ்ட் 2020 இல் அவர் முதல்வரானார்.இவர் ஒரு வாரத்திற்குள் பதவி விலகும் இரண்டாவது அட்லாண்டிக்மாகாண முதல்வராவார்.
பிரின்ஸ் எட்வர்ட் தீவு முதல்வர் டென்னிஸ் கிங் g கடந்த வாரம் அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.