சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது
2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ” அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமைகள் சமத்துவம் அதிகாரமளித்தல்” என்பதாகும்.
இது நீடித்த மாற்றத்திற்கான உந்து சக்தியாக செயல்பட்டு, அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று மொன்றியலில் இடம்பெறுகின்றது
இந் நிகழ்வில் பல்வேறுபட்ட கலை நிகவுகள் இடம்பெறுகின்றன
குறிப்பாக இன்னிசை பாடல்கள் ,கருத்துக்களம்,நாடகம் ,பரதநாட்டியம்,இசை நிகழ்ச்சி என்பன குறிப்பிடத்தக்கவை