நாளை ஞாயிற்றுக்கிழமை 9ம் திகதி கனடாவில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியான நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, 9ம் திகதி நாளை அதிகாலை 2மணிக்கு கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்தி 3மணியாக வைக்க வேண்டும்.
ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி பருவக்காலத்திற்காக மீண்டும் நேர மாற்றம் இடம்பெறவுள்ளது.
அதிகாலை 2மணிக்கு 1மணித்தியாலம் பின்னோக்கி நகர்த்தப்பட்டு 1மணியாக கடிகாரங்களில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.