Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள சிங்குவாகூசி பூங்காவில் உள்ள தமிழ் இனக்கொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டிற்குள் இது மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளது.

மார்ச் 20, 2026 ஆம் ஆண்டு அதிகாலை நேரத்தில், நினைவுச் சின்னம் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

முதன்மை மேடை மற்றும் மூன்று பேனல்களில் கிராஃபிட்டி சுவரெழுத்துகள் மூலம் அவமதிப்பு செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இரண்டு பேனல்களுக்கு சிறிய சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை பிராம்ப்டன் நகர பாதுகாப்பு பணியாளர்கள் முதலில் கண்டறிந்தனர். பின்னர் பீல் பிராந்திய காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், 2025 மே 27 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சேதப்படிப்புகளில் நினைவுச் சின்னத்தின் விளக்குகள் பெரும்பாலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து கனடியத் தமிழர் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

“இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. தமிழ் இனக்கொலை மறுப்பு மற்றும் திரித்தலின் ஒரு பகுதியாகும்,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு, பீல் பிராந்திய காவல்துறையினரையும் பிராம்ப்டன் நகராட்சியையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தலையீடு தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ள இந்த அமைப்பு, சந்தேகமான நடவடிக்கைகள் இருந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு தமிழ் கனடியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தகைய தாக்குதல்களுக்கிடையிலும், இந்த நினைவுச் சின்னம் உண்மை, நினைவு மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாக தொடர்ந்து நிலைத்து நிற்கும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதுவரை, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் குறித்து காவல்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.”

முந்தைய செய்தி மரக்கறிகளின் விலையில் மாற்றம்
அடுத்த செய்தி ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்

நவம்பர் 22, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

“தூய இலங்கை” வேலைத்திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு…

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி அக்கராயான் பகுதியில் கொலை!

அக்டோபர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?