பிரதான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விவாதங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.
கனேடியப் பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னியும் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவும் ஒரு விவாதத்தில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன் முறை என்பதால், விவாதம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த கட்சித்தலைவர்கள் கியூபெக் மாகாணப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மொன்றியல் நகரின் அருகே உள்ள செயிண்ட்-யூஸ்டாச் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பை மார்க் கார்னி நிகழ்த்துகின்றார்.
இதேவேளை, பியர் பொய்லிவ்ரேயின் ஊடகவியலாளர் சந்திப்பு மொன்றியல் நகரில் இன்று நடைபெறுகின்றது.