ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடியுள்ள தோடு பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளியை மூடியது.
இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக தெரிவித்துள்ளது.
கத்தாரும் தனது வான்வெளியை மூடியதோடு விமான போக்குவரத்துக்களை ரத்துசெய்துள்ளது. குவைத் மறு அறிவித்தல் வரும் வரை வான்வெளியை மூடியதோடு குவைத் ஏர் வேசின் அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளது.