இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் சமாதானத்துக்கு உடன்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர்
அறிவித்துள்ளார்.
இந்த சமாதான உடன்படிக்கை இன்னும் சில மணித்தியாலங்களில் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். தனது truth-social சமூக வலைத்தளப்பதிவில் டொனால்ட் ட்ரம்ப் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலும் ஈரானும் முழுமையான சமாதானத்துக்கு
இணங்கியுள்ளதாக அப்பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.