உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷ்யா நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபோரிஷியா மாகாணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக , உக்ரைன் இராணுவ அதிகாரி இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான போரை 10 முதல் 12 நாட்களுக்குள், முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும், இல்லையென்றால் ரஷ்ய அரசு கடுமையான தடைகளைச் சந்திக்கக் கூடும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
