32 ரி56 இயங்குநிலையிலுள்ள தோட்டக்கள், யக்கலமுல்ல அகுலஹேன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முற்றத்தில் தோட்டக்கள் பொதியாக கிடந்ததை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன்டிப்படையில், உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், வீட்டிற்கு வந்து, குடியிருப்பாளர்களை வெளியேற்றி, தோட்டாக்களை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
யாரோ ஒருவர் இந்த தோட்டாக்களை வீட்டின் முற்றத்தில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
