கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை, யட்டியந்தோட்டை, கேகாலை, அரநாயக்க மற்றும் திஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை, இம்புல்பே, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
