ஒன்ராறியோ மாகாண தேர்தல் இன்று இடம்பெறுகிறது,
காலை 9மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில் இரவு 9மணிவரை மக்கள் வாக்களிக்க முடியும்.
தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது மேலும் கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாகாணமாக ஒன்ராறியோ காணப்படுகின்றது .
மேலும் இந்த தேர்தலில் லோகன் கணபதி ,விஜய் தணிகாசலம் ,ஜூட் அலோசியஸ் ,அனிதா ஆனந்தராஜன்,
தட்ஸா நவநீதன் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகுதியுள்ள வாக்காளர்களில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்ததாக ஒன்ராறியோ தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1883 க்குப் பிறகு பிப்ரவரியில் ஒன்ராறியோ பொதுத் தேர்தலை நடத்துவது இதுவே முதல் முறை என்பதாலும் குளிர்காலத்தில் இந்த தேர்தல் இடம்பெறுவதாலும் மிகவும் கவனிக்க கூடிய தேர்தலாக மாறியுள்ளது.
முற்போக்கு பழமைவாத கடசியின் தலைவர் டக் ஃபோர்டு கடந்த மாதம் திடீர் தேர்தலை அறிவித்தார் , மூன்றாவது முறையாக மாகாண மேயர் ஆக பதவியேற்க முயற்சிக்கிறார் எனும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது
இதே வேளை மிசிசாகாவின் முன்னாள் மேயரும், லிபரல் கட்சித் தலைவருமான போனி குரோம்பி, 2023 இல் தலைவரான பின்பு முதல் மாகாணத் தேர்தலை எதிர்கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022 தேர்தலில் முற்போக்கு பழமைவாத கட்சி 124 இடங்களில் 83 இடங்களை வென்றனர், NDP 31 இடங்களையும், லிபெரல் கட்சி எட்டு இடங்களையும், பசுமைக் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி இருந்தது
மேலும் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தேத்தல்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள eyetamil fm உடன் இணைந்திருங்கள்.