சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் , தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிக்குமென அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்மையில் சிரியாவின் டமாஸ்கசில் உள்ள பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்தது
அதன்போது டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டது. அத்தோடு இரண்டு இராணுவ தளபதிகள் உட்பட ஏழு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து வெளியிடுகையில், சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறுகிய காலத்தில் இஸ்ரேல் மீது , ஈரான் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்குமென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போர் நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுக்க கூடாதெனவும் ,இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவை வழங்ககுமெனவும் அமெரிக்கா ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவுமெனவும், ஈரான் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் வெற்றிபெறாதெனவும் ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.