டி20 உலக கிண்ணத்தை தொடர்ந்து மேஜர் லீக் கிரிக்கெட் ( MCL )தொடரில் ,வொஸிங்டன் ஃப்ரீடம் அணிக்காக, டிராவிஸ் ஹெட் விளையாடவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஹெட் ஐபிஎல் தொடரின் பின்னர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ளார். அதன் பின்னர் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியில் இணையவுள்ளார்.
ஸ்டிவன் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் , வொஸிங்டன் ஃப்ரீடம் அணி நிர்வாகம், 2024 ஆம் ஆண்டுக்கான (MCL )தொடரில் விளையாடுவதற்காக டிராவிஸ் ஹெட்டை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
டி20 உலகக் தொடரின் பின்னர் செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரை ஆஸ்திரேலிய அணி எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேங்காத நிலையில் , டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் வொஸிங்டன் ஃப்ரீடம் அணிக்காக விளையாடவுள்ளனர்.
அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் வொஸிங்டன் ஃப்ரீடம் அணியின் புதிய பயிற்சியாளர் என்பது குறிபிடதக்கது.