T-20 உலகக்கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டெவோன் கொன்வேயும் பெயரிடப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் எடம் மில்னே உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
முன்னணி வீரர்களான டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். டிம் சௌத்தி ஏழாவது முறையாக T-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ளார். ரச்சின் ரவீந்திரா, மெட் ஹென்ரி ஆகியோர் மாத்திரமே நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் , ஏற்கனவே T-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடாத வீரர்கள்.
பென் சியர்ஸ் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இறுதியாக நியூசிலாந்து விளையாடிய இரண்டு T-20 தொடர்களில் விளையாடாத நிலையில், IPL போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனினும் அணியை வழிநடத்தும் வழமையான தலைவராக அவர் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
நியூசிலாந்து அணி வீரர்கள் தொடர்பான அறிவிப்பை , நியூசிலாந்து கிரிக்கட் சபை இம்முறை இரண்டு சிறுவர்களைக் கொண்டு அறிவித்து புதுமைப்படுத்தியது. Angus என்ற சிறுவனும், Matilda என்ற சிறுமியும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நியூசிலாந்து குழாமை அறிவித்தனர்.