பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து அணிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் ஜிலெப்சி (Jason Gillespie) , பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் T-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக கெரிக் கிரிஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் மொஹமட் அணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது நியமனம் தற்காலிகமானதெனவும், தொடர்ந்தும் அவர் சகல வடிவங்களுக்குமான உதவி பயிற்றுவிப்பாளராக செயற்படுவாரென பாகிஸ்தான் கிரிக்கட் அறிவித்துள்ளது.