Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இரவிலும் தொடரும் மீனவர்களின் காத்திருப்பு போராட்டம்.

மார்ச் 1, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட மீனவர்கள் நேற்று (28) இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீனவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளது.

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் சிறையுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் முக்கிய கட்சி பிரமுகர்கள், மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று (28) இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக தொடரும் என மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தை கைவிடுமாறு ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி, ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வருமாறு அழைத்தனர்.

ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சி மடம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (1) மீனவர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக, எஸ்டிபியை, மனிதநேய மக்கள் கட்சி,மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்..
அடுத்த செய்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நெடுந்தீவில் மக்கள் சந்திப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

பிப்ரவரி 22, 2026
இலங்கை

ஆவரங்கால் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தங்கத்தின் விலை 20,000 ரூபாவால் குறைப்பு

அக்டோபர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?