சர்வதேச நிதி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இரண்டாவது தடவையாகவும் பணியாற்றுவதற்காக கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை மீண்டும் நியமித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கான போட்டியில் ஒரே வேட்பாளராக இருந்த ஜோர்ஜீவாவின் தற்போதைய பதவிக்காலம் செப்டம்பர் 30 திகதியுடன் முடிவடையவிருந்தது.
இந்நிலையில் புதிய பதவிகாலம் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
190 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ,நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு தான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தைமுகாமைத்துவ பணிப்பாளராக, தொடர்ந்தும் வழிநடத்த கிடைத்தமையை பெருமையமாக கருதுவதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக , பல்கேரிய நாட்டவரான 70 வயதான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா செயற்பட்டுவருகின்றார்.