கிரிக்கெட் வீரர்களான ஹார்டிக் மற்றும் க்ருனல் பாண்டியா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரன் வைபவ் பாண்டியா மும்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 4.3 கோடி இந்திய ரூபா பணத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
37 வயதான வைபவ் , பாண்டியா கூட்டு நிறுவனத்தின் சுமார் 4.3 கோடி ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மும்பை பொலிஸின் நிதி குற்ற பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. பாண்டியா சகோதரர்களுக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்திலேயே பண மேசடி இடம்பெற்றுள்ளது.
அதனூடாக ஹார்டிக் மற்றும் க்ருனல் பாண்டியா ஆகியோருக்கு பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது.