Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்

நவம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் காலை முதல் மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் தனியார் மருத்துவ நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரி நிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுகவீனம் தொடர்பாக மாணவர்களால் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை அழைத்துச்செல்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் சிலர் வருகைதந்திருந்தனர்.

இருப்பினும் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை மூன்று மணி நேரமாக அவர்கள் பிரதான வாயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் அவர்களாக உள்ளே சென்று உப பீடாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தனர்.
பிள்ளைகளை தங்களுடன் அனுப்புமாறு கோரியிருந்தனர்.

காய்ச்சல் ஏற்ப்பட்டதாக கூறும் மாணவர்கள் தமது சொந்த விடுமுறையில் வீடு செல்ல முடியும் என நிர்வாகத்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கடிதம் பெறப்பட்டபின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் கேட்டபோது சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்கள் பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும் என தெரிவித்திருந்ததுடன், பெற்றோர்களின் கோரிக்கையின் பிரகாரம் அனுப்ப முடியாது என தெரிவித்தார். அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கினால் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றையதினம் கல்வியற்கல்லூரிக்கு வருகைதந்த வவுனியா சுகாதார பரிசோதகர்கள் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்ப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி பனை விதை நடுகையும் ஒடியற்கூழ் பகிர்வும்
அடுத்த செய்தி மொன்ரியலில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தும் அபாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

3 பஸ்கள் மோதி விபத்து – 29 பேர் படுகாயம்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பங்களாதேஷில் அரசு ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

மே 30, 2025
இலங்கை

மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?