பனை விதை நடுகையும் ஒடியற்கூழ் பகிர்வும் நிகழ்வு வவுனியா கண்ணாடி கணேசபுரத்தில் இன்று இடம்பெற்றது.
வவுனியா இளைஞர்கள் சிலர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு உயிர்மை இயற்கை வழி பண்ணையில் இடம்பெற்றது.
யானைகளை தடுப்பதற்கான இயற்கை வழி வேலி அமைக்கும் முறைமையை அறிமுகப்படுத்துவதோடு இதற்காக பணை விதைகளை நடுகை செய்ததோடு தமிழர்களின் பாரம்பரிய உணவான ஒடியற்கூழ் பகிர்ந்து உண்ணும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இதில் வவுனியாவை சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு பல்வேறு இடங்களில் இருந்தும் இளைஞர்கள் வயோதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
