கொங்கோ குடியரசின் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா ( Judith Suminwa Tuluka ) நியமிக்கப்பட்டுள்ளார்.அந்நாட்டு ஜனாதிபதி சிசெகெடியாவினால் புதிய பிரதமர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள் பெரும் பொறுப்பு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் நாட்டின் அமைதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், இணைந்து செயற்படவுள்ளதாக புதிய பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா கொங்கோ மக்களுகாற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.