ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டில் வசிக்கும் ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை பின்பற்றாத அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பெருமளவிலான வெளியேற்றம் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை மேலும் சீர்குலைக்கும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 4 மில்லியன் ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் தற்போது ஈரானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 700,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஏற்கனவே ஈரானை விட்டு வெளியேறிவிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
