பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் , அரச பரிசுபொருட்களை சட்டவிரோதமாக விற்பனை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இம்ரான் கானின் சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு குறித்த வழக்கில் கடந்த ஜனவரி 31 திகதி தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தேர்தலை இலக்காக கொண்டு போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இம்ரான் கானின் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறையின் பின்னர் வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் வரை தண்டனை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் 2018ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகித்தபோது கிடைக்கப்பெற்ற 50,4000 $ டொலர் மதிப்பிலான அரசு பரிசுகளை , இம்ரான் கானும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக விற்பனை செய்தாக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டது.