பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஒன்றிணைந்த பரிந்துரைக்கமைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வயிட்-போல் (ODI மற்றும் T20I ) தலைவராக பாபர் ஆசாமை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் Mohsin Naqvi தனது தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் நியூசிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அத்தொடரில் பாபர் அசாம் மீண்டும் அணித்தலமை பதவியை ஏற்றுச்செயற்படவுள்ளார்.