இந்தியாவில் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு ஆரம்பிக்க மூன்று வாரங்களே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு ஏப்ரல் 15ம் திகதி வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதிக் குற்ற விசாரணை பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜிரிவால் ஏப்ரல் 1ம் திகதி வரை தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
தலைநகர் டெல்லியின் மதுபானக் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டுகளில் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு முன்னதாக பொய்யான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கமும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் குறித்த விடயத்தில் அரசியல் தலையீட்டை மறுத்துள்ளன.