Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்!

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மூன்று அணிகளைக் கொண்ட முத்தரப்பு உள்ளுர் ரி20 லீக் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணியுடனான வெள்ளைபந்து கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண ரி20 தொடர் ஆகியவற்றுக்கு தயாராகும் நோக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.

இந்த மாதம் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, உள்ளுர் கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப் புதிய தொடரை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள 3 அணிகளும் நீலம், பச்சை மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும். அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டிகள் அனைத்தையும் பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு மைதானம் ரசிகர்களின் வருகைக்காக திறக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி பாலியல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!
அடுத்த செய்தி கிளிநொச்சியில் பல இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ பி எல் 2025 – டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

மார்ச் 19, 2025
விளையாட்டு

இலங்கை அணிக்கு அபராதம்!

ஆகஸ்ட் 31, 2025
விளையாட்டு

ஸ்குவாஷ் உலகக் கோப்பை – இந்திய அணிக்கு பதக்கம்!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி!

மார்ச் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?