டி 20 உலக கோப்பை தொடரானது இம்மாதத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அமெரிக்கா மாற்று இந்திய ஆகிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்படி இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.