புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரி பயன்படுத்தியதாக கூறப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி நீதிமன்றத்தில் வைத்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.