ஆசியாவின் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அமெரிக்கா புதிய மற்றும் அதிக வரிகளை விதிப்பதால் கனேடிய நாகரீக ஆடை நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளே, அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்புகள் கனேடிய நாகரீக ஆடைத்துறையை நேரடியாகத் தாக்கவில்லை.
எனினும், கனேடிய ஆடைத்துறையின் வர்த்தகநாமங்கள், ஆசிய நாடுகளிலேயே தங்கள் உற்பத்தியை மேற்கொள்கின்றன.
அதனால், அமெரிக்க வரிவிதிப்புகளால், கனேடிய நாகரீக ஆடைத்துறை மறைமுகப் பாதிப்புக்கு உள்ளாகின்றதென, கனேடிய ஆடைத்தொழில்துறைச் சம்மேளனத்தின் பணிப்பாளர் பாப் கிர்கே தெரிவித்தார்.