துணை மருத்துவ ஊழியர்கள் (Paramedics), கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் கொள்கை ரீதியிலான தற்காலிக உடன்பாட்டை (Agreement in Principle) எட்டியுள்ளனர்.
இவர்கள் கியூபெக் மாகாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டு ஒப்பந்தம் ஏதுமின்றிப் பணியாற்றி வந்துள்ளனர்.
கடந்த 20 முதல் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், கியூபெக் அரசுக்கும் துணை மருத்துவ ஊழியர்களுக்குமிடையில் இந்த முக்கிய உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கில் உள்ள சுமார் 3,500 துணை மருத்துவ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பு’ (FSSS-CSN) இந்த உடன்பாட்டை உறுதி செய்துள்ளது.
இதில் மொன்றியல் மற்றும் லாவால் பிராந்தியங்களின் ‘அர்ஜென்ஸ்-சாந்தே’ (Urgences-santé) அமைப்பைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அடங்குவர்.
இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்கள் விரைவில் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என ‘சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பின் மருத்துவமனை முன்சேவைப் பிரிவின் தலைவர் ழான் காக்னோன் (Jean Gagnon) தெரிவித்துள்ளார்.

