Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஜூன் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் எதிர்க்கட்சியான கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா (Parti Québécois – PQ) ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே கடுமையான முரண்பாடு வெடித்துள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் தேர்தல் நிதித் திரட்டலைத் ‘திட்டமிட்ட குற்றக் கும்பலின்‘ (Organized Crime) செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பேசிய பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டனுக்கு (Paul St-Pierre Plamondon) எதிராக, லிபரல் கட்சி அதிகாரப்பூர்வமாக ”வழக்கிற்கு முந்தைய சட்ட அறிவித்தலை” அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் மாகாணப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான அரசியல் சூழலில், இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் எத்தகைய கடுமையான விமர்சனங்களையும் சகித்துக் கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகவும், ஆனால், தனது கட்சியின் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய வேட்பாளர்களின் நற்பெயரைச் சிதைக்க முயன்றால் தாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் தெரிவித்துள்ளார்.

வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப் பொதுமக்களைத் திசைதிருப்பவும், சந்தேக விதைகளை விதைக்கவும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை, பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளதாக, லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் தாம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும், தமது கருத்துக்களை மீளப் பெறப்போவதில்லை என்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் நோர்ட் பிராந்தியப் பொலிஸ் அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
அடுத்த செய்தி ‘நோஷ்’ என்ற வார்த்தைக்கு தடை விதித்த கியூபெக் மொழி கண்காணிப்பு அமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மக்களுக்கு நிதியுதவித் திட்டங்கள் முற்றிலும் அவசியமானவை – முதல்வர் கிறிஸ்டினா பிரெஷெட்

மே 25, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கை வடஅமெரிக்காவின் முதன்மை மின்சார வாகன(EV) பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றுவதில் அபாயம் – கணக்காய்வாளர் நாயகம் கைலெய்ன் லெக்லெர்க்.

ஜூன் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகர மேயராக சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்!

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?