அமெரிக்க வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் கனடா இன்று விறுவிறுப்பான பொதுத்தேர்தலைச் சந்திக்கின்றது.
அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போர் நிலவி வரும் சூழ்நிலையில், நாட்டின் அடுத்த தலைவரைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மில்லியன் கணக்கான கனடா மக்கள் இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுகின்றனர்.
இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பிரசாரம் 36 நாட்கள் நீடித்தது.
லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ர் ஆகிய இரு முக்கிய வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.


