அல்பேர்ட்டா மாகாணத்தில் வசிப்பவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் அடையாள அட்டைகளில் கனடிய குடியுரிமை தொடர்பான தகவல்களை கட்டாயமாகச் சேர்க்கும் மாகாண அரசின் திட்டம், பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் மக்கள் இலகுவாக சேவைகளைப் பெறலாம் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறப்பட்டாலும், இது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என சட்ட மற்றும் குடிவரவு வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த மாற்றத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டேல் நாலி, “நாம் கனடாவில் வாழ்வதால், எந்த பாகுபாடும் இருக்காது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அல்பேர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், குடியுரிமைக் குறியீடுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.
நாட்டில், இந்த நடவடிக்கையை கட்டாயமாக்கிய முதல் மாகாணம் அல்பேர்ட்டா என்பது குறிப்பிடத்தக்கது.




